கிசு கிசு

எதிர்க்கட்சியின் வாயடைக்க ரஞ்சனுக்கு விடுதலை

(UTV | கொழும்பு) – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி தேசிய சுதந்திர தினத்தன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான நடிகர் கமல் ஹத்தர ஆராச்சி உட்பட சிங்கள திரைப்பட கலைஞர்கள் இணைந்து அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர். அதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மிக நெருக்கமான செல்வந்த வர்த்தகர் நிஷ்சங்க சேனாதிபதியும் கலந்துக்கொண்டார்.

இவ்வாறான சூழ்நிலையில் ரஞ்சன் ராமநாயக்க மூன்று நிபந்தனைகளின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முதலாவது ஹரின் பெர்னாண்டோவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்வது.

ரஞ்சன் ராமநாயக்க விடுதலையாகி வந்தால், தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி, அந்த பதவியை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பரிசளிக்க போவதாக ஹரின் பெர்னாண்டோ இதற்கு முன்னர் பல முறை அரசாங்கத்திற்கு சவாலாக அவர் இதனை கூறியிருந்தார். இதனால், ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையானால், ஹரின் பெர்னாண்டோ கட்டாயம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக நேரிடும்.

அப்போது அதனை நிராகரிக்காது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ரஞ்சனுக்கு விதிக்கப்பட்டுள்ள முதல் நிபந்தனை.

ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்திற்குள் ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக பலமாக குரல் கொடுத்து வரும் பாராளுமன்ற உறுப்பினர், அவரது தகவல் வெளியீடுகள் நீண்ட காலமாக அரசாங்கத்திற்கு தலைவலியாக இருந்து வருவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

‘இலங்கை முற்றிலும் திவாலாகி விட்டது’

“அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை சீர்குலைக்க பசில் சதி”

ஹரின் மீண்டும் UNP இல் இணைகிறார்