உள்நாடு

எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் வலியுறுத்தல்!

(UTV | கொழும்பு) –

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான உத்தேச விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சிகள் இணைந்து சபாநாகரிடம் வலியுறுத்தியுள்ளன. மேலும், இந்த கொடூரமான சட்டத்தை நிறைவேற்றுவதால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளையும் எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த சந்திப்பு பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
அரசாங்கத்தினால் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிகழ்நிலை காப்பு தொடர்பான சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வேண்டுகோளுக்கு இணங்க கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று கூட்டப்பட்டது.

இதற்கு முன்னரும், இச்சட்டமூலத்தை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாது சமூகத்திலுள்ள அனைத்து தரப்பினரின் கருத்துக்களுக்கும் அமைய மீள் வரைவு செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் பிரகாரம், இன்று பாராளுமன்றத்தில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த சட்ட மூலத்தை இப்போதைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் என எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உள்ளூர் மதுபானங்களுக்கு புதிய செயலி

இலங்கைக்கு வருகை தந்துள்ளவர்கள் 119 ஊடாக பதிவு செய்யும் நடவடிக்கை

இரட்டைக்குடியுரிமை பெற 5,401 பேர் விண்ணப்பித்துள்ளனர்