உள்நாடுசூடான செய்திகள் 1

“எதிர்க்கட்சி தலைவராக நாமல்?”

(UTV | கொழும்பு) –

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு ஒன்று எதிர்க்கட்சியில் அமர தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இவ்வாறு இடம்பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் சாத்தியங்கள் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக இவ்வாறானதொரு கடுமையான தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியில் அமர்வதால் அரசாங்கத்தில்  செல்வாக்கு செலுத்தலாம் என சில  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கேசரி

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமைச்சரவை அமைச்சுக்களில் மேலும் சில மாற்றங்கள்

தான் நிரபராதி என மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய மேலும் 221 பேர் கைது