வகைப்படுத்தப்படாத

எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்புக்காக போராடுவோம்

(UTV|INDIA)-குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ.வின் உடன்படிக்கைகளின் ஏற்பினால் இந்த நாள் உருவாக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10-ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

குழந்தைகள் உலகின் எதிர்கால சந்ததியினர். அவர்களுக்கு கல்வி அளிக்காமல் பணிபுரிய செய்தது மிகப்பெரிய கொடுமையாகும். அவர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருது பொருளை அடிப்படையாக கொண்டு இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. அதே போன்று இந்த ஆண்டு எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்காக போராடுவோம் என்ற கருதுபொருளை அடிப்படையாக கொண்டு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கடும் புழுதிப்புயலால் செம்மஞ்சள் நிறமாக மாறிய வானம்…

‘Silence’ hackers hit banks in Bangladesh, India, Sri Lanka, and Kyrgyzstan

ජූනි මාසයේ උද්ධමනය 3.8% කින් පහතට