சூடான செய்திகள் 1வணிகம்

எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கு அறிவித்தல்!!!-தெங்கு அபிவிருத்தி அதிகார சபை

(UTV|COLOMBO)-அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அனைத்து தேய்காய் எண்ணெய் வகைகளையும், விற்பனைக்கு ஏற்ற வகையில் சந்தையில் விநியோகிக்க வேண்டுமென்று தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அனைத்து தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

பாவனையாளர்களுக்காக விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெய் போத்தல் மற்றும் ஏனைய பொதிகளில் தேங்காய் எண்ணெயின் வகை, தயாரிப்பு, காலவதியாகும் தினம், சில்லறை விலை, எடை, தயாரிப்பாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்காத தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

செரமிக் உற்பத்தி இறக்குமதிக்கு அனுமதி

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதம் இன்று

இன்று(02) முதல் முதல் புதிய வீதி