உள்நாடு

எடை குறைந்த குழந்தைகலின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  எடை குறைந்த குழந்தைகலின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகள் 1,36,265 பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது.
குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் தரவு அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள், இந்த சதவீதம் 15.5 சதவீதமாக உள்ளது. (15.5%)

ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகள் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவாகியுள்ளதுடன், 222 குழந்தைகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாநகர சபைக்குள் மட்டும் இந்த வயதுக்குட்பட்ட எடைக்குறைந்த குழந்தைகள்1460 பேர் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

வயது தொடர்பான எடை இழப்பு குறைந்த எடை என்றும், குட்டை மற்றும் மெலிந்த குழந்தைகள் எடை குறைவான குழந்தைகள் என்றும் அடையாளம் காணப்படுகிறார்கள்.

குடும்ப சுகாதார சேவைகள் அலுவலகத்தின் தரவு அறிக்கைகளின்படி, நகர்ப்புறம், கிராமம் மற்றும் தோட்டங்கள் என அனைத்துத் துறைகளிலிருந்தும் எடை குறைந்த குழந்தைகளின் அறிக்கை அதிகரித்து வருகிறது.

உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஆபத்துக் குழுக்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கிடையில்

ஊட்டச் சத்துக் குறைபாடுகள் உருவாகி வருவதால் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றைய மின்வெட்டு அறிவிப்பு

டயானா எம்.பியின் பாராளுமன்ற உறுப்புரிமை பதவியை வறிதாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு !

இலங்கையின் உண்மையான பொருளாதார நிலைமை குறித்த உலக வங்கியின் சமீபத்திய பகுப்பாய்வு