உள்நாடு

எங்கள் கட்சியின் பாதுகாப்பு இராணுவ பாதுகாப்பை விட பலமானது

(UTV | கொழும்பு) – மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் விசேட பாதுகாப்பு நடவடிக்கையினாலேயே கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தடுக்க முடிந்ததாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி கட்சியினர் இன்று (31) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், “..இராணுவப் பயிற்சியின் பாதுகாப்பை விட கட்சித் தோழர்கள் அளிக்கும் பாதுகாப்பு பலமாக உள்ளது. தமது கட்சி மக்களைப் பாதுகாத்து வரும் கட்சியாகவே செயல்படுகிறது.

நேற்றைய தாக்குதலின் பின்னணியில் அரசியல் இருப்பது தெளிவாக புரிந்து விட்டது. இது குறித்த உண்மை நாட்டு மக்களுக்கு தெரியும். தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை ஏற்கனவே அடையாளம் கண்டுவிட்டோம்..” என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பாவனைக்கு உதவாத 95 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை திருப்பியனுப்ப அறிவுறுத்தல்

ஜனாதிபதியின் 71 ஆவது பிறந்த நாள் இன்று

கொழும்பு துறைமுகத்தின் அமெரிக்க ஒப்பந்தத்திலிருந்து விலகிய அதானி நிறுவனம்

editor