கிசு கிசு

எங்களை பின்தொடர வேண்டாம் – ஹரி தம்பதி எச்சரிக்கை [PHOTOS]

(UTV|பிரித்தானியா) – பிரித்தானிய அரச குடும்பத்திலிருந்து விலகிச்சென்ற இளவரசர் ஹரி – மேகன் தம்பதியினர், தம்மை பின்தொடர வேண்டாமென ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கனடாவில் வசிக்கும் ஹரி தம்பதியினர் குறித்த நிழற்படங்கள் அண்மையில் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

குழந்தையை கையில் ஏந்தியவாறு தனது 2 வளர்ப்பு நாய்களுடன் மேகன் வீதியில் நடந்து
செல்லும் நிழற்படமொன்றும் அண்மையில் பத்திரிகை மற்றும் இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது.

இந்த நிழற்படங்களானது, புதர்களில் மறைந்திருந்து எடுக்கப்பட்டுள்ளதாக ஹரி தம்பதியினரின் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உளவு பார்க்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் எனவும் அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

மாற்று நாள் ஒதுக்குவது இயலாத விடயம் – ஐ.சி.சி.

இந்திய லெஜண்ட்ஸ் கொரோனா, இலங்கை லெஜண்ட்ஸ் இனை தாக்குமா?

மக்களே மிகுந்த அவதானம் தேவை!!