உலகம்

எங்களின் மரணம் நிகழ்வதற்கு சில நிமிடங்களே உள்ளன – காசா மருத்துவமனையின் இயக்குநர்

(UTV | கொழும்பு) –

 

காசாவின் அல்ஸிபா மருத்துவமனையின் இயக்குநர் மரணம் நிகழ்வதற்கு சில நிமிடங்களே உள்ளன என்ற நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார். காசாவில் இஸ்ரேலிய படையினரின் முற்றுகைக்குள்ளாகியுள்ள மருத்துவமனையிலிருந்து கருத்து தெரிவித்துள்ள முகமட் அல்சல்மியா நாங்கள் உயிர்களை இழக்க ஆரம்பித்துள்ளோம் காயம்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் உயிர் இழக்கின்றனர் இன்குபேட்டரில் உள்ள குழந்தைகள் கூடஉயிரிழக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை வளாகம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது மருத்துவமனையின் கட்டிடங்கள் இலக்குவைக்கப்படுகின்றன மருத்துவமனைக்குள் நடமாடும் எவரும் இலக்குவைக்கப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார் வெளியே உள்ள இஸ்ரேலிய படையினர் எவரையும் உள்ளே அனுமதிக்கின்றார்கள் இல்லை, இன்குபேட்டரில் இருந்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளது தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் முற்றாக உலகில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளோம் எந்தவேளையிலும் மரணம் நிகழ்வதற்கு சில நிமிடங்களே உள்ள எனவும் தெரிவித்துள்ள அவர் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுமருத்துவிநியோகம் இணையவசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இத்தாலி ஜெட் விமான விபத்தில் எட்டு பேர் பலி

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு கொரோனா

இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்டவர்களின் கரங்களை நாங்கள் முத்தமிடுகின்றோம் – ஈரானின் ஆன்மீக தலைவர்.