உலகம்

எக்ஸ் தளத்தை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த வேண்டாம்!

(UTV | கொழும்பு) –

எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்காரினோ தெரிவித்தாவது, எக்ஸ் பொது மக்களுக்களின் உரையாடலுக்கான தளம். இது போன்ற சிக்கலான தருணங்களில் சட்டத்திற்கு புறம்பான தகவல்கள் எக்ஸ் தளத்தின் மூலமாக பரவுவதைத் தடுக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தீவிரவாத அல்லது வன்முறையைத் தூண்டும் குழுக்களுக்கான இடம் எக்ஸ் தளத்தில் கிடையாது, அது போன்ற சார்புடைய கணக்குகளை நீக்குவதில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியன் விடுத்த 24 மணி நேர எச்சரிக்கை அறிவுறுத்தலைத் தொடர்ந்து எக்ஸ் தளம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எக்ஸ் மட்டுமில்லாமல் மெட்டா குழுமத்தின் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போர் தொடர்பான தவறான செய்திகள் பரவுவதைத் தடுக்கவும் ஐரோப்பிய யூனியனின் இணைய விதிமுறைகளைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க மற்றும் சட்டத்திற்கு புறம்பான தகவல்கள் இணைய வழியில் பரவுவதைத் தடுக்க ஐரோப்பிய யூனியனால் புதிதாக உருவாக்கப்பட்ட எண்ம சேவைகள் சட்டத்தின் விதிமுறைகள் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கணினி பயன்பாட்டாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவிலும்