அரசியல்உள்நாடு

ஊழல், இனவாத அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது ஜனாதிபதி அநுரவுக்கு கிடைத்த வெற்றி – பிமல்ரத்நாயக்க

ஊழல் அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியானதற்கு கிடைத்த வெற்றி என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தோல்வியிலிருந்து தப்புவதற்காக ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் அடுத்த தேர்தலில் அவ்வாறான அரசியல்வாதிகள் வேட்பாளர்களாக நிற்காத நிலையை ஏற்படுத்தியமை பொதுத்தேர்தலிற்கு முன்னர் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த பெருவெற்றி என தெரிவித்துள்ளார்.

அனுரகுமாரவை ஜனாதிபதியாக தெரிவு செய்யதமைக்காக மக்களிற்கு நன்றி தெரிவிக்கவேண்டும், இது இறுதியில் ஊழல் இனவாத அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கையை முடித்துவைத்தது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமாரவிற்கு வாக்களித்தன் மூலம் மக்கள் சிறந்த செயலை செய்தனர் இது இறுதியில் ஊழல் அரசியல்வாதிகளை அகற்றியது,தோல்வியi தவிர்ப்பதற்காக இந்த அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2000 வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிக்க திட்டம்

முன்னாள் அமைச்சர் டக்ளஸுக்கு எதிரான பிடியாணை மீள பெறப்பட்டது

editor

இம்முறை பாராளுமன்றம் செல்லும் 21 பெண்கள்

editor