உள்நாடு

ஊரடங்கை மீறிய 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

(UTV|கொழும்பு) – இன்று(11) காலை 6.00 மணியுடன் நிறைவுக்கு வந்த கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 799 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த காலகட்டத்தில் 206 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மார்ச் 20 ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 51,552 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 13,350 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

இரண்டு நீதியரசர்கள் மற்றும் நீதி மன்றத்தலைவர் இன்று சத்தியப்பிரமாணம்

அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய தகவல்

அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம்