உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்குச் சட்டம் தொடர்பிலான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் நாளை மறுதினம் (27) காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த மாவட்டங்களில் வௌ்ளிக்கிழமை(27) நண்பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் நாளை (26) காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் நாளை(27) நண்பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கபீர் ஹாசிம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

திங்கள் முதல் பேருந்து சேவைகள் மட்டு

அரசியலமைப்பின் 22வது திருத்தம் இன்று பாராளுமன்றத்தில்