உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் விஷேட அறிவிப்பு

(UTV |COLOMBO) – நாட்டின் அசாதாரண நிலைமையினை கருத்தில் கொண்டு தொடர்ந்தும் 6 மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டத்தினை அமுல்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களுக்கும் நாளை (09) காலை 6.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 4.00 மணிக்கு அமுல்படுத்தப்படும்.

பின்னர், குறித்த மாவட்டங்களுக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு அதே நாள் மாலை 4.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குணமடைந்து வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா

2,500 ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

கரையோர ரயில் சேவையில் தாமதம்