உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு பிணை இல்லை

(UTVNEWS | COLOMBO) –   ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு பிணை வழங்கப்பட மாட்டாது  என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் வீடுகளை விட்டு வௌியேறக் கூடாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் , நோய் நிவாரண கட்டளைச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை

“விழுந்த குழியில் மீண்டும் விழாமல் புத்திசாலித்தனமான தீர்மானம் எடுப்பது நாட்டு மக்களின் பொறுப்பாகும்” இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

கிறிஸ்மஸ் தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட மதுபான விற்பனைக்கு கோரிக்கை