கிசு கிசு

ஊரடங்கு நீக்குவது தொடர்பில் இன்னும் பச்சை சமிஞ்ஞை இல்லை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி ஊரடங்கு உத்தரவை நீக்குவதா அல்லது நீடிப்பதா என்பது தொடர்பில் இறுதி முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படும் நிலையில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முடிவு எட்டப்படும் என கூறினார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு குறித்து, கொரோனா தடுப்பு செயலணியின் அடுத்த கூட்டத்தில் மிகவும் பொருத்தமான முடிவு எட்டப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

Related posts

தந்தையையும், மகனையும் விழுந்து விழுந்து வரவேற்கும் அயல் நாட்டவர்கள்

இம்முறை உலகக் கிண்ணம் அவுஸ்திரேலிய அணிக்கே?

பேரியல் அஷ்ரப் யாருக்கு ஆதரவு?