உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 588 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 588 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.

இவர்களின் 132 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 35,321 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.

இதுவரையான காலப்பகுதியில் 9015 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

தென்னை அபிவிருத்தி சபையின் வடமாகாண பிராந்திய முகாமையாளரின் ஊடக சந்திப்பு!

துஷான் குணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல தடை

எதிர்வரும் 18 ஆம் திகதி இறுதி சட்ட நடவடிக்கை