சூடான செய்திகள் 1

ஊடகங்கள் எப்போதும் நடுநிலையாக செயற்பட வேண்டும்-அமைச்சர்  அகில விராஜ் காரியவசம்

(UTV|COLOMBO)-ஊடகங்கள் எப்போதும் நடுநிலையாக செயற்பட வேண்டுமென  கல்வி அமைச்சர்  அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அரசை எதிர்ப்பவர்களுக்கு வழங்கும் வாய்ப்பைப் போன்று அரசிற்கும் ஊடகங்களில் வாய்ப்பளிக்க வேண்டுமென்று குறிப்பிட்டார்.

பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் தேசிய அரசாங்கம் முன்னோக்கிப் பயணிக்கின்றது. சகல துறைசார்ந்தவர்களும் தொழில் கௌரவத்தைப் பாதுகாத்துக் கொண்டு அச்சமின்றி கடமைகளை நிறைவேற்றக்கூடிய சூழல் உள்ளது. இது அரசாங்கத்தின் நற்செயல்களால் கிடைத்த பலாபலன் என்றும் தெரிவித்தார்.

அரசியல் நடைமுறையில் சில அரசுகள் எவ்வாறு ஊடகங்களை வழிநடத்தின என்பதை அமைச்சர் நினைவுகூர்ந்தார். முன்னைய அரசுகளின் ஊடக ஒடுக்குமுறைகளை நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் அனுசரிக்க மாட்டாது என்றும் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

எம்.பி. சமிந்த விஜேசிறியை கைது செய்ய சபாநாயகர் அனுமதி

தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம்

இன்று முதல் ஊரடங்கு சட்டம் நீக்கம்