சூடான செய்திகள் 1வணிகம்

உள்ளூர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சரி செய்ய வேண்டியது அவசியமாகிறது

(UTV|COLOMBO)- நிர்மாணத்துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டினால் உள்ளூர் நிர்மாணத்துறையின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சரிவை போக்குவதற்கு வரத்தக கண்காட்சிகளும், காட்சிபடுத்துல்களும் பெரிதும் துணை புரியும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 07வது தவடையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிர்மாண கண்டாசியின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக அமைச்ச கலந்துகொண்டார். 3 நாள் இடம்பெறும் இந்த கண்காட்சியில் கட்டிடம், நிர்மாணம், பொறியியல் மற்றும் கட்டகக்கலை தொழில்த்துறையில் உள்நாடு சர்வதேச வழங்குனர்கள் மற்றும் சேவை வழங்கல் நிறுவனங்கள் ஆகியவை பங்கேறிகின்றன. சீனா இந்தியா ஆகிய நாடுகளையும் உள்நாட்டினை சார்ந்த 200 நிறுவனங்கள்  இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.

 

அமைச்சர் இங்கு கூறியதாவது;

 

நிர்மாண தொழில் துறையில் ஈடுபட்டுள்ள அல்ல தொடர்புபட்ட அனைவரும் இக் கண்காட்சியில் பங்கேற்பதால் குடியுறுப்பு நிர்மாணிப்புக்கள் அல்லது எதிர்காலத்தில் தமக்கென சொந்த ஆதனத்தை உரிமையாக விரும்புகின்ற எவருக்கும் இந்த பிரமாண்டமான வர்த்தக கண்காட்சியானது மிக சிறந்த வாய்ப்பாக அமையும், நிதி உதவி, நிர்மாணம் மற்றும் உற்புர அழங்காரம் என்பவற்றின் ஊடாக குடியுறுப்பு நிர்மாணிப்பாளர்கள் வீட்டை நிர்மாணிப்பதற்கான வழிமுறைகளை வழங்குவதே இந்த கண்காட்சியின் நோக்கமாக இருப்பதால் இது இலங்கையின் நிர்மாணத்துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

 

இலங்கை நிர்மாணிப்பாளர்கள் கற்கை நிலையத்துடன் இணைந்து லங்கா எக்ஸிபிஸன் எண்ட் கென்பிரன்ஸ் சேர்விஸஸ் தனியார் நிறுவனம் இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும் தொழில்துறையில் எதிர்கால அபிவிவிருத்திக்கான தள மேடையாக இந்த கண்காட்சி அமையும் என பெரிது நம்பிக்கை தெரிவித்தார்.

 

அவர் மேலும் கூறியதாவது;

 

இலங்கையின் உள்ளூர் நிர்மாணத்துறையானது இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் 5 சதவீதத்தினால் சரிவடைந்து உள்ளமை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நமது பொருளாதரத்தில் முக்கிய துறையான இந்த துறையை இன்னும் வலுப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

 

நமது நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 7.4% பங்களிப்பை நிர்மாணத்துறை நல்குகின்றது. விவசாயத்துறையை காட்டிலும் இது அதிகளவானது. 2017ஆம் ஆண்டு 6.6% வளர்ச்சியில் இருந்த நிர்மாணத்துறை , இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டு தாக்கத்தினால் தளர்வடைந்தது.

 

இவ்வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிர்மாண எக்போ 2018 கண்காட்சியாந்து இந்த துறையை முன்னேற்றுவதற்கு உதவுமென நான் மீண்டு நம்பிக்கை தெரிவிக்கின்றேன். இந்த நிர்மாண கண்காட்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது

அளுத்கம ஸ்ரீ தம்மானந்த தேரர் தனது 103 ஆவது வயதில் காலமானார்