உள்நாடு

உள்ளூராட்சி சபை தேர்தல் நிலவரம்

(UTV | கொழும்பு) – உள்ளூராட்சி சபை தேர்தல் நிலவரம்

நேற்றைய தின பிற்பகளுடன் நிலவரப்படி, உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக 08 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

✔ அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான கட்டுப்பணத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வும்,
✔ கம்பஹா மாவட்டத்தில் உள்ள நீர்கொழும்பு மாநகர சபைக்கான கட்டுப்பணத்தை ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியும்,

✔ மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி உள்ளூராட்சி மன்றம் தவிர்ந்த ஏனைய 11 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை இலங்கை தமிழ் அரசுக்கட்சி கட்சியும்,

✔ புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை ஐக்கிய காங்கிரஸ் கட்சியும்,

✔ குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி யும் ,

✔ மேலதிகமாக, 11 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 11 சுயேட்சைக் குழுக்கள் நேற்று கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் மின்வெட்டு

சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியை பார்வையிட்ட சஜித்

editor

பாராளுமன்றம் கூடியது