உள்நாடு

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலவரத்தினால் உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது இன்று (07) தொடக்கம் மறு அறிவித்தல் வரை பொது மக்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆயினும், பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இ- சேவைகளூடாகப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றினை திணைக்கள வலைதளத்தில் www.ird.gov.lk மற்றும் 1944 இலக்கத்தை அழைத்து குறித்த சேவை தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

Related posts

நாட்டை சிக்கலுக்குள் ஆழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டிய எந்த அவசியமும் எமக்கில்லை – சஜித் பிரேமதாச

editor

சட்டமூல வழக்கை ஒரே நாளில் தீர்த்திருக்க முடியும் – ரவூப் ஹக்கீம் எம்.பி

editor

கொழும்பில் தமிழர்களை அச்சுறுத்தும் பொலிஸ் – சபையில் மனோ