கேளிக்கை

உலகின் நகைச்சுவை ஜாம்பவான் பில் கொஸ்பேவிற்கு சிறைத்தண்டனை

(UTV|COLOMBO)-ஹொலிவூட் உலகின் நகைச்சுவை ஜாம்பவானான பில் கொஸ்பேவிற்கு (Bill Cosby) 3 முதல் 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பில் (81 வயது) மீது பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாலியல் வன்கொடுமையாளர் என வகைப்படுத்தப்பட்டுள்ள பில் கொஸ்பே, அதாவது அவர் வாழ்க்கைக்கான ஆலோசனைகளைப் பெற வேணடும் எனக் கூறப்படுகின்றது.

வாய்ப்பு வழங்கப்பட்டபோதும், அது குறித்த அறிக்கையை வௌியிட பில் மறுத்துள்ளார்.

அதேநேரம், அவர் பிணை கோரி விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற குற்றச்செயல் தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கு விசாரணையின் நிறைவாக அவருக்கு இந்தச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலியானாவா இது?

கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா

சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்