உலகம்சூடான செய்திகள் 1

உலகளவில் பலி எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

(UTV|கொவிட்-19)- உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200,719 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கொரோனாவால் உலக அளவில் 2,873,619 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸ் பாதிப்பில் குணமடைந்தோர் எண்ணிக்கை 823,306 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் இதுவரை 20,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உடவளவ தேசிய வனத்திற்குள் துப்பாக்கிகளுடன் மூவர் கைது

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு அனைத்தும் தயார்

இடியுடன் கூடிய மழை