அரசியல்உள்நாடு

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க (IMTC) பிரதிநிதிகள் – சிறீதரன் எம்.பியுடன் சந்திப்பு

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் (IMTC) செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் தலைமையிலான குழுவினர் இன்று 23 ஆம் திகதி இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை கிளிநொச்சியில் உள்ள தமிழரசு காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் கிளிநொச்சி அலுவலகம் – அறிவகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, 2026 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்த திட்டமிட்டுள்ள மாநாடு தொடர்பில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.

அத்தோடு, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

Related posts

இங்கிலாந்து ராணி உலகை விட்டும் பிரிந்தார்

தேசிய மின் கட்டமைப்புடன் 163 MW மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளது

தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல்