வகைப்படுத்தப்படாத

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்

(UTV|COLOMBO)-உலக முழுவதும் வாழும் கிறிஸ்தவ மக்கள், நேற்று நள்ளிரவு தொடக்கம் நத்தார் பண்டிகையை கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

நத்தார் பண்டிகையானது இயேசு கிறித்துவின் பிறப்பைக் எடுத்துக்காட்டும் வண்ணமாக ஆண்டு தோறும் கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.

இயேசு கிறிஸ்த்து பிறப்புவிழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும்.

இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவானது கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.

இந்த விழா கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், நத்தால் தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், நத்தால் மரத்தை அழகூட்டல், நத்தால் மகிழ்ச்சிப் பாடல்கள், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்குபவையாகும்.

இந்த கொண்டாட்டத்தின் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.

இந்தநிலையில், நத்தால் தினத்தை கொண்டாடும் சகலருடனும் UTV செய்தி பிரிவும் இணைந்து கொள்கிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

15 வருடங்களின் பின் பணிப்பெண்ணுக்கு 49 இலட்சம் ரூபா

Navy arrests 3 persons with ammunition

நிக்கி ஹேலி – நரேந்திர ​மோடி சந்திப்பு