வகைப்படுத்தப்படாத

‘உலக வர்த்தக அமைப்பின் செயற்பாடுகள் இலங்கைக்கு முக்கியமானது’-அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

(UTV|COLOMBO)-இலங்கை போன்ற சிறிய பொருளாதாரங்களுக்கு பல்துறை வர்த்தக முறைகள் மீதான, உலக வர்த்தக அமைப்பின் தலைமையிலான விதிகள் அதன் உறுப்பினர்கள் மத்தியில் ஒரு நிலையான மட்டத்தை செயற்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது செய்தியில் தெரிவித்திருந்தார்.

கடந்த டிசம்பர் 10 ஆம்  திகதி முதல் 13 ஆம் திகதி வரை,  ஆர்ஜென்டினா ப்யூனோஸ் ஏர்ஸில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 11 ஆவது உலக அமைச்சர்களின் மாநாட்டில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சார்பாக இலங்கைப் பிரதிநிதி தலைமையில் சென்ற அமைச்சின் மேலதிக செயலாளரான ஷீதா செனரட்ன, அமைச்சரின் செய்தியை அந்த மாநாட்டில் வெளிப்படுத்திய போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அச்செய்தியில் தெரிவித்திருந்ததாவது,

டிஜிட்டல் மாற்றம் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்த்தல், வேலையின்மை நிலை, வர்த்தக நிதி மற்றும் நிலையான அபிவிருத்தி அணுகல் போன்ற பல வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் இன்று எதிர்கொள்ளும் பெரிய சவால்கள் உள்ளன. இவை  வர்த்தகத்தின் மெதுவான வளர்ச்சிக்கும் இட்டுச் செல்கின்றது. குறிப்பாக இலங்கை போன்ற சிறிய பொருளாதாரங்களுக்கான பல்வகை வர்த்தக முறை மீதான, உலக வர்த்தக அமைப்பின் தலைமையிலான விதிகள், அதன் உறுப்பினர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பை ஆதரிக்கும் வகையில் ஒரு மட்டத்தை செயல்படுத்துவதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.. வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் திறன் வளர்ப்பு ஆற்றலை உருவாக்கிக் கொள்ள உலக வர்த்தக அமைப்பு உதவ வேண்டும் எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த மாநாட்டில் உலக வர்த்தக அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரொபர்ட் அஸெவிடோவின் உரையாற்றும் போது தெரிவித்ததாவது,

உலக வர்த்தக அமைப்பின் வர்த்தகமானது, அதன் வரலாற்றில் சிறந்த வறுமை எதிர்ப்பு வளர்ச்சிக்கான, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு கருவிகளில் ஒன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வர்த்தகத்தின் இத்தகைய சாதகமான பங்கை நாம் எவ்வாறு பராமரிக்கிறோம் மற்றும் இந்த சவாலான பல்வகை வர்த்தக சூழலில் விரும்பிய நன்மைகள் பெறுகின்றோம் என்பது எனது கேள்வி. பன்முகத்தன்மையைக் கொண்டு நமது கொள்கைகளை ஒருங்கிணைப்பதற்கான ஒவ்வொரு முயற்சிக்கும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிலிருந்து வரும் உறுப்பினர்கள், எங்கள் அபிவிருத்தி இலக்குகளுக்கு ஊக்கமளிப்பதற்கான பங்களிப்பை உலக வர்த்தக அமைப்பு  எதிர்பார்க்கின்றது. உலக வர்த்தக அமைப்பில் எமது அர்த்தமுள்ள மற்றும் நிலையான ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்துவதற்கான நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய, இந்த வெற்றிகரமான வெற்றி எமக்கு வெற்றியாகும்.

உலக வர்த்தக அமைப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மை உறுப்பினர்களான வளரும் நாடுகளின் தேவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதுதான் அமைப்பின் முக்கிய எதிர்பார்ப்பு.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் இயந்திரமாக சர்வதேச வர்த்தகம் கருதுகிறது. நாட்டின் புவியியல் இடம், அறிவு சார்ந்த சமூகத்துடன் பூர்த்திசெய்யும் உகந்த வர்த்தகச் சூழல் நாட்டிற்கும், அதன் வர்த்தக பங்காளர்களுக்கும் போட்டிமிக்க பலங்களை வழங்கியுள்ளது. எனவே வளர்ச்சி மூலோபாயம், சர்வதேச வர்த்தகத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கும் நிலையான அபிவிருத்திக்கு பங்களிப்பு அணுகுமுறையை இலக்காகக் கொண்டுள்ளது இலங்கை.

இவ் உலக அமைச்சரவை மாநாட்டில் இலங்கை பிரதிநிதிகான ஆர்.டி.எஸ். குமார ரட்ன, உலக வர்த்தக அமைப்பின் தூதுவரும் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி திருமதி. கோத்தமி சில்வா மற்றும் வர்த்தக திணைக்கள அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

සරසවි අනධ්‍යන සේවකයින් හෙට වර්ජනයකට සුදානම් වෙයි.

18 மாவட்ட பாடசாலை கல்லூரிகளுக்கு விடுமுறை

‘வில்பத்து பொய் மற்றும் உண்மைகள்’ நூல் வெளியீடு