விளையாட்டு

உலக பெட்மின்டன் செம்பியன்ஷிப் போட்டிக்கான திகதியில் மாற்றம்

(UTV | கொவிட் 19) – எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உலக பெட்மின்டன் செம்பியன்ஷிப் போட்டிக்கான திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச பெட்மின்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வருடம் நடாத்தப்பட வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் உட்பட பல்வேறு சா்வதேச போட்டிகள் 2021ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, சர்வதேச பெட்மின்டன் செம்பியன்ஷிப் போட்டிகள் ஸ்பைனின் ஹு எல்வா (huelva) நகரில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் நடைபெறுவதாக இருந்தது.

எனினும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதால், சர்வதேச பெட்மின்டன் சம்மேளனம் உலக பெட்மின்டன் செம்பியன்ஷிப் போட்டி அட்டவணைகளை மாற்றி அமைக்கத் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, 2021ஆம் ஆண்டு நவம்பா் 29ஆம் திகதி முதல் டிசம்பா் 5ஆம் திகதி வரை சர்வதேச பெட்மின்டன் செம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுமென சர்வதேச பெட்மின்டன் சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டிகளை சர்வதேச பெட்மின்டன் சம்மேளனம் மற்றும் ஸ்பைன் பெட்மின்டன் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடாத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வேகப்பந்துவீச்சாளர்

ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்த மிட்சல் ஸ்டார்கின் ஓவர்!

இங்கிலாந்து தொடருக்கு கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்தினரை அழைத்து செல்ல தடை