சூடான செய்திகள் 1

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் வாரமொன்று பிரகடனம்

(UTV|COLOMBO) ஜூன் 05ஆம் திகதி இடம்பெறும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் வாரமொன்றை பிரகடனப்படுத்தி சுற்றாடல் பாதுகாப்பிற்காக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அனைத்து செயற்திட்டங்களையும் பலப்படுத்தி அவற்றை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று (24) முற்பகல் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

 

Related posts

பணமில்லையால் இலங்கையின் பிரதான சேவை இருளில்…!

அஜித் மான்னப்பெருமவின் பதவியில் மாற்றம்

விளம்பி வருட சுபநேரங்கள்