வகைப்படுத்தப்படாத

உருளைக்கிழங்குக்கான வரி அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வரி திருத்தம் தொடர்பான வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான விசேட பண்ட வரியை 20 ரூபாவில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சர்வதேச ஊடகங்களின் இன்றைய ஹீரோ மஹிந்த……

Manmunai North Secretarial Division emerge champions

අද තවත් තීරණාත්මක තරඟයක්