உலகம்

உருமாறிய கொரோனா வகைகளுக்கு WHO இனால் புதிய பெயர்கள்

(UTV | கொழும்பு) –  உருமாறிய கொரோனா வகைகளுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617.2 கொரோனா வகை டெல்டா கொரோனா வகை என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, பிரிட்டன் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா ´Alpha´ என்று அழைக்கப்படும்.

தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா ´Beta´ என அழைக்கப்படும்.

மேலும், பிரேசிலில் கண்டறியப்பட்ட வகை ´Gamma´, அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா ´Epsilon´ என அழைக்கப்படும்.

இந்த ஆண்டு ஜனவரியில் பிலிப்பைன்ஸ் கண்டறியப்பட்ட கொரோனா ´தீட்டா´ என்று பெயரிடப்பட்டுள்ளது.

Related posts

‘மலேசியா என் இரண்டாவது வீடு’ – திட்டத்திற்கு தடை

கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு

அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ்