சூடான செய்திகள் 1

உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ள ரம்புட்டான் தோல்

 

(UTV|COLOMBO)-டெங்கு நோய் தீவிரமாக பரவி வரும் மாவட்டங்களின் ஒன்றாக கம்பஹா மாவட்ட உள்ளது.

குறித்த மாவட்டத்தில் நீக்கப்பட்ட ரம்புட்டான் தோல்களே இதற்கு காரணமாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரம்புட்டான் உட்கொள்ளும் பலர் அதன் தோல்களை வீதியிலும் வீட்டுசூழலும் வீசுவதால் அதில் தேங்கும் நீரில் டெங்கு நுளம்பு முட்டையிடுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனால் அவர்களின் உயிர்களுக்கு ஆபத்தாக மாறிவிடுகின்றது.

இதன் காரணமாக ரம்புட்டான் தோல்களை உரிய முறையில் சேகரித்து கழிவுப்பொருட்களுடன் சேர்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சந்தேகத்திற்கிடமானவர்கள் மூலமாக கொரோனா பரவும் அபயம்

மன்னார் நகரை அழகுபடுத்துவதில் தடைகள் ஏற்பட்ட போதும் அவற்றையும் தாண்டி நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துள்ளோம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2674 ஆக உயர்வு