சூடான செய்திகள் 1

உயிரிழந்த குடும்பத்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் 160 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் அறிவித்துள்ளது.

மேற்படி உயிரிழந்த 162 பேரின் குடும்பத்தினருக்காக 138 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய தொகை காயமடைந்த 193 பேருக்காக வழங்கப்பட்டிருக்கிறது. சேதமடைந்த கத்தோலிக்க தேவாலயங்களை மறுசீரமைக்க அரசாங்கம் 25 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருக்கிறது.

Related posts

கொத்து ரொட்டியில் தவளை

அரசுக்கு எச்சரிக்கை விடுத்த GMOA

இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக இன்று(04) மேன்முறையீடு