உள்நாடு

உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் வெள்ளியன்று

(UTV | கொழும்பு) – கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் எதிர்வரும் 10ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மேலும் பிற்போடுவதாகத் தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் கருத்து தெரிவிக்கையில்;

“2020 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 7ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கடந்த மாதம் அறிவித்தோம். எனினும் குறித்த தினத்தில் பரீட்சையை நடத்தாமல் சிறிது காலத்துக்குப் பிற்படுத்துமாறு ஒருசிலர் கேட்டிருக்கின்றனர்.

அதேபோன்று அரசாங்கம் அறிவித்த திகதிக்கே பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் சிலர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில், கொழும்பு மற்றும் வெளிப்பிரதேச மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் இதுதொடர்பாக ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு, பரீட்சையை நடத்துவது தொர்பாக இறுதி தீர்மானத்தை எதிர்வரும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அறிவிப்போம்” என மேலும் தெரிவித்தார்.

Related posts

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் கடமையேற்பு

editor

களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டது ; நாளை புனித நோன்புப் பெருநாள்