உள்நாடுசூடான செய்திகள் 1

உதயசூரின் சின்னத்தில் உதயமான தமிழர் ஐக்கிய முன்னணி

(UTVNEWS | COLOMBO) –கிழக்கில் 4 கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி கட்சி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் சின்னம் உதயசூரின் சின்னம் தெரிவு செய்யப்பட்டு தேர்தலில் களமிறங்கவுள்ளதாக கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி. சிவநாதன் தொரிவித்தார்.

மட்டக்களப்பு ஏரன்ஸ் வீதியில் அமைந்துள்ள கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைமைகாரியலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வி. ஆனந்த சங்கரி, இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி கட்சி தலைவர்முன்னாள் பிரதி அமைச்கருமான நா.கணேசமூர்த்தி ஆகியேர் கலந்து கொண்டுனர். இதன் போது கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி. சிவநாதன் இவ்வாறு தெரிவித்தனர்.

கிழக்கு தமிழர் ஒன்றியம் நீண்ட காலமாக கிழக்கில் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றினைத்து பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற முயற்சியை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பித்து இன்று சிவராத்திரி தினத்தில் வெற்றி கண்டுள்ளது.

Related posts

ஓமானில் மனித கடத்தல் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

கல்வியமைச்சின் அறிவித்தல்

69 வருடத்திற்கு பின்னர் இன்று நாடு முற்றாக முடங்கியது