உள்நாடு

உடன் அமுலாகும் வகையில் சில பகுதிகள் முடக்கம்

(UTV | கொழும்பு) – இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் 4 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல காவல்துறை பிரிவுக்குட்பட்ட நொரகல்ல கிராம சேவகர் பிரிவில் நொரகல்ல மேல் பிரிவு, யக்தெஹிவத்த கிராம சேவகர் பிரிவில் பீன்கந்த தோட்டம் 1 , பீன்கந்த தோட்டம் 2 மற்றும் பாதகட கிராம சேவகர் பிரிவில் பீன்கந்த தோட்டம் 3 ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், மொனராகலை மாவட்டம், மொனராகலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹிந்திகிவுல கிராம சேவகர் பிரிவில் நக்கலவத்த மற்றும் மில்லகெலேவத்த ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு

கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல தடை

editor