உள்நாடு

உடன் அமுலாகும் வகையில் சில பகுதிகள் முடக்கம்

(UTV | கொழும்பு) – திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று(23) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில், நாகராஜ வலவ்வ கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவின் முதலாம் மற்றும் இரண்டாம் குறுக்கு வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காத்தான்குடி பிரிவு 4, காத்தான்குடி பிரிவு 5 தெற்கு, காத்தான்குடி பிரிவு 6 மேற்கு, புதிய காத்தான்குடி பிரிவு வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம் காத்தான்குடி பொலிஸ் அதிகாரப்பிரிவுக்குட்பட்ட கர்பலா வீதி, ஏ.எல்.எஸ். மாவத்தை, நூரானியா பொது மயான வீதி மற்றும் கடற்கரை வீதி என்பனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புத்தாண்டை முன்னிட்டு இலங்கை வந்த INS ரன்விஜய் கப்பல்

நீர்கசிவு காரணமாக கடலில் மூழ்கும் MV Xpress pearl

இரட்டைக் கொலை தொடர்பில் இரண்டு பேர் கைது

editor