உள்நாடு

உக்ரைன் இராணுவத்தில் இணைய ஆர்வம் காட்டும் இலங்கை படையினர்!

(UTV | கொழும்பு) –

உக்ரைன் இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கு இலங்கை படையினர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 70 முன்னாள் இராணுவ வீரர்கள் உக்ரைனின் வெளிநாட்டுப் படைப்பிரிவில் இணைந்து கொள்ள விண்ணப்பம் செய்துள்ளனர்.இராணுவத்திலிருந்து சட்ட ரீதியாக விலகியவர்களே இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளனர். உக்ரைன் படையில் இணைந்து கொள்ளும் நோக்கில் ஏற்கனவே இராணுவ உத்தியோகத்தர்கள் அசர்பைஜான், டுபாய் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கெப்டன் ரானிஸ் ஹேவகேவின் விசேட படையணில் இணைந்து கொள்வதற்காக இவர்கள் குறித்த நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் இவ்வாறு படையினர் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை தேடிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைன் படையில் இணைந்து கொள்ளும் வீரர்களுக்கு மாதாந்த சம்பளமாக 1 மில்லியன் ரூபா முதல் 12 மில்லியன் ரூபா வரையில் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே சுமார் 20 இலங்கைப் படையினர் உக்ரைன் படைகளில் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கப்பலில் வைத்தே தரம் தொடர்பில் ஆராயப்படும்

புதுப்புது பீதிகளை கிளப்பி அரசியலில் எம்மை பணியவைக்க முயற்சி

பருத்தித்துறைமுனையில் சீன அதிகா