உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை : சட்டமா அதிபரிடமிருந்து 130 பக்க அறிக்கை

(UTV | கொழும்பு) – சஹ்ரானின் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியமான சந்தேகநபர்கள் 42 பேருக்கு எதிரான சாட்சியங்களை எழுத்துமூலமாக உறுதிப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார். இது தொடர்பில் 130 பக்கங்களைக்கொண்ட அறிக்கையொன்றை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாக்குதலுடன் தொடர்புடைய, 5 பேர் தொடர்பான விசாரணைகள் முழுமை பெறவில்லை எனவும், இதற்கான விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து உறுதிப்படுத்துமாறும் பொலிஸ் மா அதிபருக்கு, சட்ட மா அதிபர் மேலும் அறிவித்துள்ளார்.

Related posts

முச்சக்கர வண்டி கட்டணம் ஒரேடியாக அதிகரிப்பு

Xpress Pearl இனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் கொடுப்பனவு

வீடுகளுக்கு தேடிவரும் ‘பூஸ்டர்’