உலகம்

ஈரானில் தொடரும் போராட்டம்

(UTV|ஈரான்) – ஈரான் ஆட்சியாளர்களை எதிர்த்து அங்கு இரண்டாவது நாளாகவும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய பயணிகள் விமானத்தை ஈரானிய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாக்தாத் விமான நிலையத்தில் வைத்து ஈரானிய இராணுவத்தளபதி குவாசிம் சொலைமானி கொல்லப்பட்டமைக்கு பதில் தாக்குதலை மேற்கொள்ளும் வகையில் ஈரானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனடிப்படையில் 176 பயணிகளுடன் பயணித்த விமானம் கடந்த புதன்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது.

எனினும் இது விபத்து என முன்னதாக ஈரான் அறிவித்திருந்த நிலையில், பின்னர் தற்செயலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் குறித்த விமானத்தில் அதிகளவான ஈரானியர்கள் பலியானதாக குறிப்பிட்டு அங்கு தொடர்ந்தும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பஹ்ரைன் செல்லும் அனைவருக்கும் PCR பரிசோதனை

போர் நிறுத்தம் இன்றுடன் முடிவா – இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய அறிவிப்பு

தாலிபான்கள் முன்னிலையில் உலக நாடுகள் தோல்வி