அரசியல்உள்நாடு

இஸ்லாமிய மத நூல்கள் இறக்குமதிக்கு தடை எதுவுமில்லை – பிரதியமைச்சர் அருண ஜயசேகர

இஸ்லாமிய மத நூல்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தினால் எத்தகைய தடையும் விதிக்கப்படவில்லை என பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், தேசிய பாதுகாப்பு கருதி ஜனாதிபதி விசாரணைக்குழுவின் பரிந்துரைக்கமைய அனைத்து மத நூல்களும் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைக்கு மாத்திரம் உட்படுத்தப்படுவதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.

நேற்றைய (06) பாராளுமன்ற அமர்வில், வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இதனை தெரிவித்த பிரதியமைச்சர் அருண ஜயசேகர தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

2021ஆம் ஆண்டு மே மாதம் பாதுகாப்பு அமைச்சின் அப்போதைய செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ், பாதுகாப்பு அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய மத நூல்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

எனினும், 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு பின்னர், அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழுவின் பரிந்துரைக்கமைய அனைத்து மத நூல்களுக்கும் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கை மாத்திரம் இடம்பெறுகிறது.

இந்த ஒழுங்குபடுத்தல் நடவடிக்கையினால் நூல்கள் இறக்குமதியாளர்களுக்கு எந்த சிரமங்களும் ஏற்படுவதில்லை.

அத்துடன், இந்த நடவடிகையை மேற்கொள்ளும்போது பாதுகாப்பு அமைச்சினால் எந்த தாமதிப்பும் ஏற்படப்போவதில்லை.

Related posts

இலங்கை ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பிரித்தானியாவில் எதிர்ப்பு போராட்டம்!

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 81,220 பேர் கைது

இன்று விசேட வங்கி விடுமுறை