உலகம்

இஸ்தான்புல் விமானம் விபத்து ; மூவர் பலி, 179 பேர் காயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | இஸ்தான்புல்) – இஸ்தான்புல்லின் சபிஹா கோக்கென் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானம், ஓடு பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 179 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோசமான வானிலை காரணமாகஓடு பாதையை விட்டு விலகி வயலில் வீழ்ந்தே விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளானபோது மூன்று துண்டுகளாக உடைந்துள்ளது.

விபத்தினைத் தொடர்ந்து எரியும் விமானத்தில் ஏற்பட்ட விரிசல்களின் மூலமாக விமானத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் இரண்டு விமானிகளும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் அவர்களது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

பொகசஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விமானம் மேற்கு துருக்கிய நகரமான இஸ்மிரில் இருந்து இஸ்தான்புல்லின் சபிஹா கோக்கென் விமான நிலையத்திற்கு வந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய பொலிஸ்மா ஊடகப்பேச்சாளராக நிஹால் தல்துவ

முன்னாள் ‘TATA’ தலைவர் மரணம்

உலக அளவில் 65 இலட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு