விளையாட்டு

இவ்வாண்டுக்கான ஆசிய தொடரை இலங்கையில் நடாத்த இந்தியா எதிர்ப்பு

(UTV |கொழும்பு) – 2020ம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண தொடரை இலங்கையில் நடத்தும் திட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் நிறுவனம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ஆசிய கிரிக்கெட் சபையுடன் கூட்டம் டெலி காண்பரன்ஸ் மூலம் நடந்தது. அதில் இந்த தொடரை நடத்துவது குறித்த எவ்வித இறுதி முடிவும் எட்டப்படவில்லை. இதற்கிடையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, இலங்கை கிரிக்கெட் சபை சேர்ந்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை மாற்றி நடத்த ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.

ஆசிய கிரிக்கெட் கவுண்சில் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷாமி சில்வா, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மாற்றம் குறித்த தகவலை உறுதிபடுத்தினார். இந்த முடிவுக்கு இந்திய கிரிகெட் சபை (பிசிசிஐ) கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த தகவல்கள் எங்கிருந்து எவ்வளவு வேகமாக கசிந்தது என்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுண்சில் கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என்பது பிசிசிஐக்கு உறுதியாக தெரியும். ஆசிய கோப்பை தொடரை நடத்துவதற்காக ஐபிஎல் தொடரை குறுகிய தொடராக நடத்த வாய்ப்பே இல்லை” என்றார்.

Related posts

காலியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது ஜப்னா

இலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிப்பு

இலங்கை அணியின் தலைவரை மாற்றுமாறு கோரி கிரிக்கட் நிறுவனத்துக்கு அவசர கடிதம்