கிசு கிசு

இளம் பிக்குகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்…

(UTV|COLOMBO) இலங்கை பிக்கு சமூகம் குறித்து பிழையான மனப்பதிவுகள் உலகில் ஏற்பட்டுவிடக் கூடாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் அதிகமான இளம் பிக்குகள் நாட்டில் பௌத்த சமூக சூழலொன்றையும் சிறந்த சமூகமொன்றையும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள அதேநேரம், சிறியதொரு பிரிவினரின் நடவடிக்கைகளின் காரணமாக சில சந்தர்ப்பங்களில் முழு மகாசங்கத்தினரும் விமர்சனத்திற்கு உள்ளாவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சில பிக்குகளின் மோசமான நடத்தைகள் இணையத்தளங்களினூடாக வெளியிடப்படுகின்றன.

எனவே இதன் காரணமாக இலங்கை பிக்குகள் சமூகம் குறித்து பிழையான மனப்பதிவொன்று உலகில் ஏற்படக்கூடும்.

இந்த நிலைமை குறித்து இளம் பிக்குகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

 

 

 

 

Related posts

இதனால் தான் நான் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை!உண்மையை வெளியிட்டார் சன்னி லியோன்

பசில் ராஜபக்ஷ தான் ஜனாதிபதி வேட்பாளர்?

அலரி மாளிகைக்குள் ஆயுத களஞ்சியங்கள்-அதன் பாதுகாப்பு ஆபத்தில்?