சூடான செய்திகள் 1

இளம் ஜோடி செய்த காரியம்-காவற்துறையினரால் கைது

(UTV|COLOMBO)-ருவன்வெல்ல நகரில் அமைந்துள்ள தங்க நகை விற்பனையகம் ஒன்றில் தங்க நகையை கொள்ளையிட்ட இளம் ஜோடியினர் காவற்துறையால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் தங்க நகை வாங்குவதாக தெரிவத்து சுமார் 64 ஆயிரம் பெறுமதியான நகையை கொள்ளையிட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

பின்னர் , விற்பனையக உரிமையாளர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய சிசிடிவி காட்சிகளை பயன்படுத்தி குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

26 வயதுடைய ஆணொருவரும் மற்றும் 24 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில ்ருவன்வெல்ல காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வாக்குமூலத்தில் சூத்திரதாரி பெயரை கூறாத மைத்திரி !

நாவலப்பிட்டியில் தீ இரண்டு குடியிருப்புகள் சேதம்

அமெரிக்கா பாதுகாப்பு பிரிவுடன் உடன்படிக்கை இல்லை