அரசியல்உள்நாடு

இலஞ்சம் ஊழல் மோசடி நிறைந்த அரசியலை மாற்றியிருக்கின்றோம் – அமைச்சர் சாவித்திரி போல்ராஜ்

நாட்டில் சீர்குலைந்த அரசியல் கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டி மறுமலர்ச்சிக்கான அரசியல் கலாச்சாரத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இன்று (12) நோர்வூட் பிரதேசசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யும் நிகழ்வு பொகவந்தலாவ பகுதியில் இடம்பெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

எமது அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறி நான்கு மாதங்கள் கடந்துள்ளன.

இந்த நான்கு மாதகாலப்பகுதியில் நாங்கள் என்ன செய்தோம் என பலர் கேள்வி ஏழுப்பியுள்ளார்கள். இதுவரை காலமும் இலங்கை நாட்டின் பொருளாதார நிலை வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.

வீழ்ச்சியடைந்த பொருளாதார நிலையில் கூட நாம் அனைவரும் உழைத்து இந்த நாட்டில் சேகரிக்கின்ற பணத்தில் பாரிய பங்கை பயன்படுத்திவர்கள் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்.

ஆனால் மக்களின் பயண்பாட்டுக்கு மிஞ்சியது குறைந்தளவு பணம் மாத்திரமே.

எமது அரசாங்கத்தில் மக்கள் பணத்தை மக்கள் மயப்படுத்தி பொது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி மக்களுடைய வாழ்க்கை நிலையினை உயர்த்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதனால்தான் நாங்கள் கூறுகிறோம் வாழ்நிலை அபிவிருத்தி என்பது வேறு ஒரு நிலை வறுமை கோட்டில் வாழுக்கின்ற மக்கள் அதிகமான மக்கள் மலையகத்தில் தான் வாழ்கிறார்கள்.

ஒரே வரிகளை செலுத்துக்கின்ற மக்களுக்கிடையில் உரிமைகள் போன்ற விடயங்களில் பாகுபாடு காணப்படுகிறது.

எமது அரசியல் கொள்கை என்பது சீரான அபிவிருத்தி என்றால் அனைத்து மக்களும் சமமான உரிமைகளை பெறவேண்டும் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய கொள்கைகளில் ஒன்று இந்த அபிவிருத்தியை நாடு முழுவதும் விரிவாக்கப்பட வேண்டும்.

பொருளாதாரத்தில் உள்வாங்க வேண்டும் அப்போது தான் மக்களுடைய வாழ்வு அபிவிருத்தியடையும் என்பதை நாங்கள் உறுதியாக கூறுகிறோம்.

அதனை தவிர்த்து 2 கிலோ கோதுமை மா, 5 கிலோ அரிசி, போன்றவைகளை பங்கிட்டு மதுபான போத்தலும் சோறு பார்சலும் வழங்கினால் மக்களுடைய வாழ்க்கை நிலை ஒரு போதும் அபிவிருத்தியடையாது.

இது போன்ற அற்ப சொற்ப சலுகைகளுக்கு ஏமாற்றமைடைந்த சமூகம் தற்போதில்லை. மேலும் நாங்கள் அவ்வாறு வாக்களிக்கவும் தயாராக இல்லை அவ்வாறு உருவாக்கப்பட்டது தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாற்றம்.

அது ஜனாதிபதி தேர்தலில் உறுதிபடுத்தப்பட்டது. அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. அத்தோடு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மேலும் மேலும் அது வலுபடுத்தப்படும்..

பிரதேசசபையின் ஊடாக கௌரவமான ஒரு மரணத்தை நல்லடக்கம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.

நகரபகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் வரிப்பணம் அறிவிடுகிறார்கள் நகரப்பகுதியில் முறையான மலசல கூடங்கள் இல்லை.

சிறுவர் பூங்கா இல்லை. முறையாக ஒரு வாசிகசாலை கூட இல்லை. நாட்டில் உள்ள அனைவருக்கும் அரசியல் பேசமுடியும்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் 76 வருட காலமாக பல்வேறு துறைகளில் பல்வேறு சாதனைப் படைத்த பல அரசியல்வாதிகளிடமும் பல அரசியல் கட்சிகளிடமும் இருந்து நிறைய கதைகள் கேட்டுள்ளோம்.

தேசிய மக்கள் சக்தி உருவாக்கியது பத்தாவது பாராளுமன்றம். இதற்கு முன்பு ஒன்பது தடவை இந்த பாராளுமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

அங்கு அமைச்சரவை கூடப்பட்டு இருக்கிறது. நுாற்றுக்கணக்கண அமைச்சுப் பதவிகள் வகிக்கப்பட்டுள்ளன.

அதில் நுவரெலியா மாவட்டத்தில் இருந்தும் அமைசர்கள், பிரதி அமைச்சர்கள் என பலர் பங்களித்திருக்கிறார்கள்.

அவர்கள் அந்த சமூக அங்கீகாரத்தை பெருவதற்கு மக்கள் ஆணை வழங்கியிருந்தார்கள்.

அவர்களுக்காக அங்கு எவரும் குரல் எழுப்பவில்லை.

உரிமைகளை கோரி களத்தில் இறங்கி போராடியிருக்கவேண்டும். இலஞ்சம் ஊழல் மோசடி நிறைந்த அரசியல் முறைமையை நாங்கள் மாற்றியிருக்கின்றோம் என்றார்.

-சதீஸ்குமார்

Related posts

வயிற்று வலிக்கு வழங்கிய ஊசியால் யுவதி மரணம் : பேராதனை வைத்தியசாலையில் சம்பவம்

11 இடங்களில் நாளை முதல் கொரோனா பரிசோதனை

இன்றும் நாளையும் பேலியகொட மெனிங் சந்தை திறப்பு