வணிகம்

இலங்கையுடன் மிக நெருக்கமான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை பேண விரும்புவதாக ரஷ்யா தெரிவிப்பு…

(UTV|COLOMBO)- இலங்கையுடன் மிக நெருக்கமான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை பேணுவதற்கு விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கான புதிய இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட தயான் ஜயதிலக்க தனது நியமனக் கடிதத்தை ரஷ்ய ஜனாதிபதியிடம் நேற்று(11) கையளித்தனர்.

இதனை ஏற்றுக் கொண்டு அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி புட்டின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “ரஷ்யா, இலங்கையுடன் பாரம்பரியமான நட்புறவை பேணி வருகிறது. இதேவேளை, மீன்பிடி, விவசாயம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் நெருக்கமான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை பேணவும் விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில், வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ், ரஷ்ய ஜனாதிபதியின் வெளிநாட்டு கொள்கை ஆலோசகர் யூரி உஷாகொவ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையின் தலைசிறந்த வங்கியாக கொமர்ஷல் வங்கி தெரிவு

இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி

உருளைக்கிழங்கு கிலோவொன்று 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய தீர்மானம்!