உள்நாடுவீடியோ

இலங்கையில் முதலாவது ஷெல் எரிபொருள் நிலையம் திறப்பு | வீடியோ

அமெரிக்க நிறுவனமான RM PARKS,ஷெல் வர்த்தக நாமத்தின் கீழ் இலங்கையில் முதலாவது எரிபொருள் நிலையத்தை அம்பத்தலை பகுதியில் இன்று (26) திறந்து வைத்தது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நாட்டில் எரிபொருள் சந்தையில் நுழையும் நான்காவது நிறுவனம் இதுவாகும்.

RM Parks (தனியார்) நிறுவனம், இலங்கை முழுவதும் உள்ள 150 சில்லறை எரிபொருள் நிலையங்களின் வலையமைப்பை ஷெல் என மறுபெயரிட்டுள்ளது.

இது இலங்கை பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தால் 2023 ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தமாகும்.

வீடியோ

Related posts

பாராளுமன்ற பெண் ஊழியர்களின் ஆடையில் மாற்றம்!

கப்பல்களிலுள்ள லிட்ரோ நிறுவன எரிவாயு மாதிரிகள் பரிசோதனைக்கு

நாய் வளர்த்ததால் கைது