உள்நாடு

இலங்கையில் கிராமம் ஒன்று சீல் வைக்கப்பட்டது

(UTV | கொழும்பு) – பண்டாரகம பிரதேச செயலகப்பிரிவில் அட்டலுகம என்ற பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 26 பேர் அந்த பிரதேசத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த கிராமத்திலுள்ள அனைத்து மக்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள 26 பேரும் 14 நாட்களுக்கு முறையான மருத்துவ ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்றும் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் உரிய சுகாதார அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Related posts

இறக்குமதி அரிசியில் வண்டுகள் – பழைய லேபிள்களின் மேல் புதிய லேபிள் – அரிசியை மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு

editor

வடக்கு பிரதேச மரம் நடுகை விழா!

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரங்கள்