உள்நாடு

இலங்கையில் இதுவரை 1196 பேர் பூரண குணம்

(UTV | கொவிட்-19) – இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மேலும் அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் மேலும் 46 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1196 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 1877 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 670 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தணிக்கை சபை ரத்து!

நாட்டிற்கு வருவோருக்கு PCR பரிசோதனை கட்டாயம்

நீதவான் சரவணராஜா விவகாரம் – BASL கண்டனம்.