உள்நாடு

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய விசாக்கள்!

(UTV | கொழும்பு) –

இலங்கை அரசாங்கம் புதிய விசா கொள்கையை அறிமுகப்படுத்தவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள ஆணையாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

முதலீட்டு விசாக்கள், வெளிநாட்டு இணைய வழி ஊழியர்களுக்கான டிஜிட்டல் குடியிருப்பு விசாக்கள், போர்ட் சிட்டி குடியிருப்பு விசாக்கள் மற்றும் இலங்கையர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்களுக்கான நிரந்தர வதிவிட விசாக்கள் ஆகியவை புதிய விசா கொள்கையில் அடங்குகின்றன. மற்றொரு பிரிவின் கீழ், வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் விசாக்களை ஆண்டுதோறும் புதுப்பிப்பதற்குப் பதிலாக ஒரு முறை 200 டொலர்களை செலுத்துவதன் மூலம், முழுப் படிப்பையும் நிறைவு செய்சதற்கான வசதி மேற்கொள்ளப்படும்.

டிஜிட்டல் பணிகளில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள், நாட்டில் இருக்கும் போது மாத வருமானம் 2,000 அமெரிக்க டொலர்கள் என்பதற்கான சான்றை வழங்குவதன் மூலம் ஒரு வருடத்திற்குள் டிஜிட்டல் விசாவை பெற முடியும். இதேவேளை கோல்டன் பெரடைஸ், கொண்டோமினியம், குடியிருப்பு விருந்தினர் திட்டம் மற்றும் மை ட்ரீம் ஆகிய விசாக்களின் கீழ் வரும் விசா வகைகளுக்குப் பதிலாக இன்வெஸ்ட்மென்ட் விசா எனப்படும் ஒரு வகை விசாவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் வெளிநாட்டு ஊழியர்களுக்காக இந்த வதிவிட வீசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உர மானியம் வழங்கப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

editor

மஹிந்த இன்று SLPP உறுப்பினர்களை சந்திக்கிறார்

ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுச்சென்ற நான்கு பேர் கைது